ஃபீரி பயரால் கெட்டுப்போன செல்போன்.. பள்ளி மாணவன் எடுத்த விபரீத முடிவு.!
school student escape in rajasthan for mobile repair
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பார்மெர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மோகன்லால் மகன் ஓம்பிரகாஷ். பதினேழு வயதுடைய இவர், எல்லா நேரத்திலும் செல்போனில் ஃபீரி பயர் (FREEFIRE) கேம் விளையாடி வந்துள்ளார். பெற்றோர் கண்டித்தும் அவர் கேட்பது போல் தெரியவில்லை.
ஆன்லைன் விளையாட்டால் அவருக்கு படிப்பும் சரியாக அமையாததனால், பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு தினமும் ஃபிரீ பயர் விளையாடி வந்துள்ளார். இதனால் ஓம்பிரகாஷை அவரது பெற்றோர் ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கும் ஓம்பிரகாஷ் கேம் விளையாடி வந்துள்ளார். ஒருகட்டத்தில் அவரின் செல்போன் பழுதாகிவிட்டது.

ஃபோனை சரி செய்து கொடுத்தால், எப்போதும் விளையாடிக் கொண்டே இருப்பான் என்பதால், உறவினர் செல்போனை சரிசெய்து தராமல் இருந்துள்ளார். இதனால், கோபித்துக் கொண்ட சிறுவன் ஓம்பிரகாஷ், ஜனவரி 30ஆம் தேதி அதிகாலை யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். எங்கு தேடியும் கிடைக்காததால், அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.
அதன் படி போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த சிறுவன் சங்ககிரி வரை நடந்தே சென்றதும், பழுதான செல்போனை விற்று, அதன் மூலம் கிடைத்த பணத்தை வைத்து பெங்களூருவுக்கு சென்றதும் தெரிய வந்துள்ளது. பின்னர், சிறுவன் அங்கிருந்து உத்தரப்பிரதேசத்திற்கு ரயிலில் சென்று சாமியார் ஆசிரமத்தில் தங்கியிருந்துள்ளார். இதையடுத்து போலீசார், சிறுவனை மீட்டு ஈரோடு அழைத்து வந்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
English Summary
school student escape in rajasthan for mobile repair