மீண்டும் உலக நாடுகளை அச்சுறுத்த வரும் புதியவகை கொரோனா வைரஸ்; சீனாவில் கண்டுபிடிப்பு..!
A new type of coronavirus that is threatening the world again Discovery in China
சீனாவில் மீண்டும் புதிய வகை வௌவால் கொரோனா வைரஸ்-ஐ சீன குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது. இது உலக நாடுகளை மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவிட்-19 போன்றே இந்த புதிய வைரஸூம் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.
அந்நாட்டின் நச்சுயிரியல் வல்லுநரான ஷி-ஷெங்லி தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் புதிய வகை வைரஸ் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த வௌவால் கொரோனா வைரஸ்கள் குறித்து ஷி-ஷெங்லி ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

குறித்த ஆய்வுகளில் வூஹான் பல்கலைக்கழகம் மற்றும் வூஹான் நச்சுயிரியல் மையத்தின் கீழ் இயங்கும் ஆங்சூ ஆய்வகம் மற்றும் ஆங்சூ அறிவியல் மைய ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றியுள்ளனர்.
இந்த புதிய வகை கொரோனா வைரஸ் ஹெச்.கே.யு.5 (HKU5) என அழைக்கப்படுகிறது. இந்த வைரஸ் ஜப்பானை சேர்ந்த பிபிஸ்ட்ரெல் வகை வௌவால்களில் காணப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸூம் மனிதர்களின் சுவாச மண்டலத்தை பாதிக்கும் தன்மை கொண்டுள்ளது. இதுவும் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும் ACE 2, அதாவது முந்தைய சார்ஸ்-கோவி-2 வைரஸ் போன்ற பாதிப்பை ஏற்படுத்துகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், "வௌவால் ACE 2 மட்டுமின்றி மனித ACE 2 மற்றும் வெவ்வேறு இனங்களின் மரபணுக்களை பாதிக்கும் ACE 2 வகையை சேர்ந்த HKU5-CoV-ஐ கண்டுபிடித்திருப்பதை அறிவிக்கிறோம்," என சீன குழு இதழ் ஒன்றில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
A new type of coronavirus that is threatening the world again Discovery in China