மீண்டும் சி.எஸ்.கே- இல் இணையும் சுரேஷ் ரெய்னா; ரசிகர்கள் உற்சாகம்..!
Suresh Raina to join CSK again
இந்திய அணி முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னா. இவர் ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.) அணிக்காக விளையாடி வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு அறிவித்தார்.
தற்போது கிரிக்கெட் போட்டிகளின் முக்கிய தொகுப்பாளராக சுரேஷ் ரெய்னா பணியாற்றுகிறார். இவர் மீண்டும் சி.எஸ்.கே. அணியில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி 2025 ஐ.பி.எல். தொடரில் சுரேஷ் ரெய்னா சி.எஸ்.கே. அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் CSK ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தற்போது சி.எஸ்.கே. அணியின் தலைமை பயிற்சியாளராக ஸ்டீபன் பிளெமங் வலி நடத்துகிறார். கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் சி.எஸ்.கே. அணியின் தலைமை பயிற்சியாளராக பிளெமிங் செயல்பட்டு வருகிறார். பிளெமிங்கின் தலைமையில் பேட்டிங் பயிற்சியாளராக மைக்கேல் ஹசி, பந்துவீச்சு ஆலோசகராக எரிக் சிமோன்ஸ் மற்றும் பீல்டிங் மற்றும் பேட்டிங் பயிற்சியாளராக ராஜீவ் குமார் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், சி.எஸ்.கே. அணியின் புதிய பீல்டிங் பயிற்சியாளராக 2025 ஐ.பி.எல். தொடரில் சுரேஷ் ரெய்னா நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. எனினும், இது குறித்து சி.எஸ்.கே. அணி நிர்வாகம் தரப்பில் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
English Summary
Suresh Raina to join CSK again