தற்கொலைப்படை தாக்குதல் விபத்தாக மாறியது! கோட்டை ஈஸ்வரனை தரிசிக்கச் செல்லும் அண்ணாமலை! - Seithipunal
Seithipunal


பந்த் ரத்து, ஆனால் கோவை விசிட் இருக்கு! தேதியை குறித்த அண்ணாமலை!

கடந்த 23ஆம் தேதி நடந்த கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் பலியானார். இதனைத் தொடர்ந்து அவரது வீட்டில் மேற்கொண்ட சோதனையில் 75 கிலோ வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டன. இந்த சமம் தொடர்பாக இதுவரை ஆறு பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். 

மேலும் கோவை காருக்கு வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க ஸ்டாலின் பரிந்துரைத்தார். இதனை ஏற்ற உள்துறை அமைச்சகம் சம்பவத்தை விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப்புக்கு உத்தரவிட்டது. இதனை அடுத்து என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை கார் வெடிப்பு சம்பவத்தை கண்டித்து பாஜக சார்பில் பந்த் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 

இதனை எதிர்த்து கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் நேற்று அவசர வழக்காக உயர் நீதிமன்றம் விசாரணை ணை நடத்தியது. இதில் ஆஜரான அண்ணாமலை தரப்பு வழக்கறிஞர் தமிழக பாஜக சார்பில் பந்த் ஏதும் அறிவிக்கப்படவில்லை. மாவட்ட பாஜக சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்த பந்த்-க்கும் மாநில பாஜகவிற்கும் சம்மந்தம் இல்லை என வாதத்தை முன் வைத்தார். இதனை அடுத்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் 31ஆம் தேதி பந்த் நடத்த தடை விதித்தனர். 

இந்த நிலையில் பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராஜா இன்று மாவட்ட சார்பில் அறிவிக்கப்பட்ட பந்த் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளார். இதற்கிடையே வரும் 31 ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவை செல்ல உள்ளார். கோவையில் கார் வெடிப்பு நடைபெற்ற இடத்திற்கு அருகே உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு செல்ல உள்ளதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் "கோவையில் நடந்த தற்கொலை படை தாக்குதல் விபத்தாக மாறி பெரும் முயற்சியதம் தவிர்க்கப்பட்டது கோட்டை ஈஸ்வரன் அருளால். தமிழக பாஜக கோவை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்களுடன் நாளை மறுநாள், அக்டோபர் 31ஆம் தேதி நம்மை காத்து அருளிய கோட்டை ஈஸ்வரனை தரிசிக்க வருகிறேன்" என பதிவிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bjp annamalai visit to Hindu temple near Coimbatore car incident place


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->