ராகுல் காந்தி மீது பாஜக எம்.பி.க்கள் தாக்குதல்? காங்கிரஸ் எம்.பி.க்கள் புகார்!
BJP Congress Ambedkar
உள்துறை அமைச்சர் அமித் ஷா அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசியதாக நாடு முழுவதும் எதிர்ப்பு பெருகி வரும் நிலையில், டெல்லி கிருஷ்ண மேனன் சாலையில் உள்ள அமித் ஷா இல்லத்தில் பாஜக தலைவர்களும், அமைச்சர்களும் ஆலோசனை நடத்தி உள்ளனர்.
இந்நிலையில், ராகுல் காந்தி மீது 3 பாஜக எம்.பி.க்கள் தாக்குதல் நடத்தியதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ் எம்.பி.க்கள், புகார் தெரிவித்துள்ளனர்.
"இது அவரது கண்ணியத்தின் மீதும், நாடாளுமன்றத்தின் ஜனநாயக தர்மத்தின் மீதுமான தாக்குதலாகும்" என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். மேலும், ராகுல் காந்தி உள்ளிட்ட எங்களை பாஜகவினர் நாடாளுமன்றத்திற்குள் நுழைய தடுத்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதற்கிடையே, அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேச்சு அவைக் குறிப்பில் இருந்து நீக்குமாறு சபாநாயகரிடம் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம சுப்ரமணியன் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், "சபையின் கண்ணியத்துக்கு எதிரான வார்த்தைகள் நீக்கப்படாவிட்டால், உச்ச நீதிமன்றத்தில் புகார் அளிக்க நேரிடும்" என்றும் அவர் தெரிவித்தார்.