பாஜகவின் குடியரசு தலைவர் வேட்பாளர் யார்? உயர்மட்ட குழு ஆலோசனை,! - Seithipunal
Seithipunal


குடியரசுத் தலைவர் வேட்பாளர் முடிவு செய்வதற்காக பாஜகவின் உயர்மட்டத் தலைவர்கள் கூடி ஆலோசனை செய்து வருகின்றனர்.

தற்போது இருக்கும் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக்காலம் ஜூலை மாதம் 25ஆம் தேதி நிறைவு பெறுகிறது.

இதனையடுத்து, குடியரசுத் தலைவர் பதவிக்கு பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த எதிர்க்கட்சிகள் ஆலோசனை செய்து வருகின்றனர். இது தொடர்பாக தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ், சரத்பவார், மம்தா பானர்ஜி உள்ளிட்டவர்கள் முக்கிய ஆலோசனை மேற்கொள்ள இருக்கின்றனர்.

இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் உயர்மட்ட தலைவர்களின் ஆலோசனை கூட்டம் தலைநகர் டெல்லியில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அமித்ஷா, ஜேபி நட்டா கலந்து கொண்டனர். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஐம்பத்தி ஏழு இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல், குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து விவாதம் செய்யப்பட்டதாக தெரிகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp delhi meeting for president of india election candidate


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->