கோவா, உத்தரகாண்ட் முதலமைச்சர்கள் யார்.. பாஜக தலைமை ஆலோசனை.! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பஞ்சாப்பை தவிர மீதமுள்ள உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய நான்கு மாநிலங்களிலும் பாஜக அபார வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.

இந்தநிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் வரும் மார்ச் 25ஆம் தேதி முதல் அமைச்சராக பதவி ஏற்கிறார். இந்த நிலையில் உத்தரகாண்ட் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் முதலமைச்சராக பதவியேற்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் இந்த இரு மாநிலங்களிலும் முதல்வர் யார் என்பதை தேர்வு செய்ய பாஜக தலைமை ஆலோசனை செய்து வருவதாகவும் முதல்வர் பதவிக்கு ஒரு சிலர் கடும் போட்டி போடுவதால் முதலமைச்சரை தேர்வு செய்ய முடியாமல் பாஜக திணறி வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இன்னும் ஓரிரு நாட்களில் இந்த இரு மாநிலங்களின் முதலமைச்சர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP discuss Goa and uthirakhand chief minister


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->