பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி கைது!! - Seithipunal
Seithipunal


சென்னை அடுத்த பனையூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீடு அருகே பாஜகவினர் கொடி கம்பம் அமைக்க திட்டமிட்டு அதற்கான கட்டுமான பணிகளை நிறைவு செய்திருந்தனர். இந்நிலையில் பாஜக கொடி கம்பம் அமைத்திருந்த இடம் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமானது என்பதால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த பாஜகவினர் அப்பகுதியில் குவிந்ததால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது. மேலும் மோதல் ஏற்படும் சூழல் நிலவியதால் இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் கொடிக்கம்பம் அமைப்பதற்கு நெடுஞ்சாலைத் துறையிடம் பாஜகவினர் அனுமதி பெறவில்லை என தெரிய வந்ததால் பாஜக கொடி கம்பத்தை அகற்ற போலீசார் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு வந்தனர்.

இப்போது ஆத்திரமடைந்த பாஜகவினர் காவல்துறையினர் மீதும் ஜேசிபி இயந்திரம் மீதும் தாக்குதல் நடத்தினர். இதனால் பாஜகவினரை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தி ஜேசிபி இயந்திரம் மூலம் பாஜக கொடிக்கம்பத்தை அப்புறப்படுத்தினர். 

இந்த சம்பவம் தொடர்பாக பாஜகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் இது தொடர்பாக 5 பேரை கைது செய்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழ்நாடு பாஜக விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டியை போலீசார் கைது செய்துள்ளனர். பாஜக கொடி கம்பத்தை அகற்ற வந்த ஜேசிபி இயந்திரத்தை தாக்கிய புகாரில் 6வது நபராக அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பலர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP executive Amar Prasad Reddy arrested


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->