அண்ணாமலையின் வலது கரம் மேலும் ஒரு வழக்கில் கைது!!
BJP executive Amar Prasanth Reddy again arrested
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் வலது கரமாக வலம் வந்த தமிழ்நாடு பாஜக விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி அண்ணாமலை வீட்டின் முன்பு வைக்கப்பட்ட கொடிக்கம்பம் அகற்ற காவல்துறையினர் முயன்ற போது ஜேசிபி இயந்திரத்தை தாக்கியதோடு கண்ணாடி உடைத்தது மற்றும் அரசு ஊழியர்கள் பணி செய்யாமல் தடுத்தது என 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவரை கைது செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் சிறையில் உள்ள அமர் பிரசாத் ரெட்டியை காவல்துறையினர் மேலும் ஒரு வழக்கில் கைது செய்துள்ளனர். கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது அரசு விளம்பரத்தில் பிரதமர் மோடியின் படத்தை ஒட்டிய வழக்கில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் அமிர் பிரசாத் ரெட்டியின் நீதிமன்ற காவலை வரும் 30ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
English Summary
BJP executive Amar Prasanth Reddy again arrested