பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம்.. இந்த கட்சியில் தான் சேரப் போகிறார்.?!  - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக நிர்வாகியாக இருந்த நடிகை காயத்ரி ரகுராம் சமீபத்தில் அண்ணாமலையார் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டார். அதன் பின்னர் அண்ணாமலை குறித்து பல்வேறு அவதூறு கருத்துக்களை மூலம் வெளியிட துவங்கினார்.

அண்ணாமலையார் பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பின்மை நிலவுவதாக அவர் குற்றம் சாட்டினார். மேலும் கட்சியின் முக்கிய வீடியோ ஒன்றை காயத்ரி ரகுராம் வெளியிட்டதாக கூறப்பட்டது. நேற்று அவர் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதை அடுத்து காயத்ரி ரகுராம் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் எனது எட்டு வருட உழைப்பை சுரண்டி கொண்டு என் பெண்மையை அவமானப்படுத்தி, என் பணத்தை உழைப்பை சுரண்டிக்கொண்டு என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்கு நன்றி. களத்தில் சந்திப்போம்." என்று பாஜகவுக்கு எதிராக தெரிவித்து இருந்தார்.

இத்தகைய நிலையில் தற்போது அவர் பாஜகவை எதிர்த்து தமிழகம் முழுவதும் நடைபயிற்சி மேற்கொள்ளப் போவதாக ட்வீட் போட்டுள்ளார். பாஜகவுக்கு எதிராக அவர் திமுகவில் இணைவார் என்று சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

ஆனால், பாஜகவில் இருந்த போது காயத்ரி ரகுராம் திமுகவை படுமோசமாக விமர்சித்தார். ஆகவே அவர் திமுகவில் இணைய வாய்ப்புகள் இல்லை என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், காயத்ரி ரகுராம் அதிமுகவில் இணைவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும், இது குறித்து அவர் ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bjp Gayathri raguram may join with Admk


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->