பாஜகவினர் வன்முறையாளர்கள்! படிப்பது ராமாயணம் இடிப்பது பொருமாள் கோவில்!
BJP is against federal philosophy
பாஜகவினர் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானவர்கள்!
சென்னையில் இன்று டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பிறகு செய்தியாளர் சந்தித்த அவர் "தான் பிறந்த பகுதியில் சிறந்த கல்வி நிறுவனங்களை நடத்தியவர் சிவந்தி ஆதித்தனார் என பாராட்டினார். ஆழ்ந்த சிந்தனையும் தொலைநோக்கு பார்வையுடனும் ஒரு நிறுவனத்தை நடத்தியவர்" என சிவந்தி ஆதித்தனார் புகழ்ந்தார்.
இதனைத் தொடர்ந்து " தமிழகத்திற்கு வருகை புரிந்த பாஜக தேசிய தலைவர் ஜேபி நாட்டா இந்தியாவிலேயே தேசிய கட்சியாக பாஜக மட்டும் தான் உள்ளது எனவும் தமிழகத்திற்கான நிதியை பிரதமர் மோடி ஒதுக்கி தமிழகத்தின் வளர்ச்சிக்காக உறுதுணையாக உள்ளார்" எனக் கூறியதை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி " தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கதாக சொல்லும் பாஜக நேற்று தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாணிக்க தாகூர் மற்றும் சு.வெங்கடேசன் மதுரை எய்ம்ஸ் அமைவுள்ள இடத்தை பார்வையிட்டது ஊடகங்களில் வெளியானது. ஒரு திட்டத்தை துவக்குவதற்கே 11 ஆண்டு காலம் ஆகிவிட்டது என்றால் அவர்கள் எவ்வளவு நிதி வழங்கி உள்ளனர் என்பது இதில் இருந்தே தெரிகிறது.
படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில் என்பது போல அவர்கள் சொல்வதற்கும் நடைமுறைக்கும் சம்மந்தமே இல்லை. வந்தே பாரத் ரயில்வே திட்டத்தின் மூலம் 180 கிமீ வேகத்தில் ஓடக்கூடிய ரயில்களை இயக்குகிறார்கள். ஆனால் தமிழகத்திற்கு ஒரு ரயில் கூட ஒதுக்கப்படவில்லை. அந்த ரயில் பெட்டிகள் அனைத்தும் பெரம்பூர் ரயில் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் தமிழகத்திற்கு ரயில்களை ஒதுக்கவில்லை. கூட்டாட்சி தத்துவத்தில் அவர்களுடைய பங்கு இதுதான்.
ஏனென்றால் அவர்களுக்கு கூட்டாட்சி தத்துவத்தில் நம்பிக்கை இல்லை. அவர்கள் ஒரு வன்முறையாளர்கள், சர்வாதிகாரிகள், ஒற்றைக் கருத்து மட்டும் நிலவ வேண்டும் என்று கருதுபவர்கள், மாற்றுக் கருத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் நாட்டிற்கு தீமையானவர்கள்" என்று பாரதிய ஜனதா கட்சியை சாடினார்
English Summary
BJP is against federal philosophy