மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சியை பிடித்தது பாஜக!...பொது மக்களுக்கு ஏக்நாத் ஷிண்டே நன்றி! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கு  ஒரே கட்டமாக இந்த மாதம் 20-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். இந்த நிலையில்,  20-ம் தேதி பதிவான வாக்குகள் வாக்குச்சாவடிகளில் இன்று காலை 8 மணி முதல் தொடங்கப்பட்டு வருகிறது.

முன்னதாக, பாஜக காங்கிரஸ் இடையே தற்போது இழுபறி நீடித்து வருகிறது.  அதன் படி, பாஜக கூட்டணியும், காங்கிரஸ் கூட்டணியும் சம பலத்துடன் 10 தொகுதிகள் வித்தியாசத்தில் இருந்தது.

தொடர்ந்து பா.ஜ.க. தலைமையிலான ஆளும் மகாயுதி கூட்டணி தற்போது முன்னிலை வகித்து வருகிறது. ஆட்சி அமைக்க தேவைப்படும் பெரும்பான்மைக்கான இடங்கள் 145. இந்த சூழலில்,   200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி தற்போது முன்னிலை வகித்து வருகிறது. இதன் மூலம்  
மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ.க கூட்டணி ஆட்சியை தக்க வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், மகாராஷ்டிரா  முதலமைச்சரும், சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டே சற்று முன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இது மாபெரும் வெற்றி என்றும், மகாயுதி அமோக வெற்றி பெறும் என்று முன்பே கூறியிருந்ததாக தெரிவித்த அவர், சமுதாயத்தின் அனைத்து பிரிவினருக்கும் நான் மகாயுதி கட்சியின் சார்பில் நன்றி கூறுகிறேன் என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bjp is back in power in maharashtra eknath shinde thanks to common people


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->