ரயில் விபத்தை பூசி மொழுகும் பாஜக?...யாரும் அரசியல் செய்யாதீர்கள்! - எல்.முருகன்! - Seithipunal
Seithipunal


சுதந்திரப் போராட்ட வீராங்கனை குயிலியின் 244வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக குயிலியின் 244வது நினைவு தினத்தையொட்டி, மத்திய அமைச்சர் எல்.முருகன் சிவகங்கையில் அவரது சிலைக்கு அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ரயில்வேத்துறை எண்ணற்ற மாற்றங்களை சந்தித்து வருகிறது என்றும், புல்லட் ரயில் இந்தியாவில் இயக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், திருவள்ளூரில் நடைபெற்ற ரயில் விபத்து சிறிய விபத்து என்று தெரிவித்த அவர், இதனை வைத்து அரசியல் செய்யக் கூடாது என்றும், கடந்த 10 ஆண்டுகளில் ரயில் விபத்துகள் குறைந்துள்ளதாகவும், ரயில் விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில்,  விரைவில் அதற்கான காரணம் குறித்து அறிவிக்கப்படும் என்று கூறினார்.

பாக்மதி விரைவு ரயில் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு  சென்றுகொண்டிருந்தது. தொடர்ந்து அந்த ரயில், திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே வந்துகொண்டிருந்தபோது, அங்கு ஏற்கெனவே நின்றுகொண்டிருந்த சரக்கு ரயிலின் பின்னால் வேகமாக வந்து மோதி விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில், சில பெட்டிகள் தீப்பிடித்து எரிந்த நிலையியில்,  சிக்னல் கோளாறு காரணமாக ரெயில் விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்த விபத்தில்  19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bjp is growing by covering the train accident do not do politics l murugan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->