#தேர்தல் நிலவரம் : அதிமுகவை பின்னுக்கு தள்ளி பாஜக 7 இடத்தில் இரண்டாவது இடம்!! - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணியில் நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாட்டில் 7 நாடாளுமன்ற தொகுதிகளில் இரண்டாவது இடத்தை பிடித்து முன்னிலை வகிக்கிறது பாரதிய ஜனதா கட்சி.

இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆலயம் அறிவித்தபடி ஏப்ரல் 19ம் தேதி முதல் கட்ட வாக்கு பதிவு தொடங்கி ஜுவல் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து இன்று மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக 38 தொகுதிகளில் முன்னிலையில் வகித்து வருகிறது. அதிமுக கூட்டணி 1 தொகுதியிலும் பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி 1 இடத்திலும்  முன்னிலை வகித்து வருகிறது.

இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக மட்டுமே தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறது. தமிழ்நாடு பாஜக நட்சத்திர வேட்பாளர்களான அண்ணாமலை, நயனார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாட்டின் தேசிய ஜனநாயக கூட்டணி கோயம்புத்தூர், நீலகிரி, கன்னியாகுமரி புதுச்சேரி, தென் சென்னை, மத்திய சென்னை உள்ளிட்ட நாடாளுமன்ற தொகுதிகளில் அதிமுகவை மூன்றாவது இடத்திற்கு தள்ளி இரண்டாம் இடம் பிடித்து முன்னிலை வகித்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP is second in 7 places behind AIADMK


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->