ஏழைகளிடம் பணம் பறிப்பதே பாஜகவின் வேலை!..பாஜக-வை வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி! - Seithipunal
Seithipunal


ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளுக்கான சட்டசபைக்கு நடப்பு மாதம் நவம்பர் 13 மற்றும் 20-ம் தேதி என இரண்டு  கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு தேர்தல் களம் தீவிரமடைந்துள்ளது.  மேலும், அரசியல் கட்சியினர் அனல் பார்க்கும் தீவிர பிரச்சரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி
பக்மாரா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், ஏழைகள், விவசாயிகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் பழங்குடியினரிடம் பிரதமர் மோடி செல்வதில்லை என்றும், அவர் எந்த ஒரு ஏழையின் திருமணத்துக்கும் சென்றதில்லை என்று கூறிய அவர், ஆனால் அம்பானி இல்ல திருமணத்துக்கு சென்றுள்ளார் என்று கூறினார்.

மேலும், நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக  பெண்கள் அனைவரும் அதிகம் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி அனைத்தையும் ஜிஎஸ்டி-யின் கீழ் கொண்டு வந்துள்ளதால், நாட்டின் ஏழை மக்களிடம் இருந்து பணம் பறிக்கும் வழியாகவே முழு வரிக் கட்டமைப்பும் உள்ளதாக குற்றம் சாட்டினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bjp job is to extort money from the poor rahul gandhi bought bjp


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->