பாராளுமன்றத்தில் 1990 ஆண்டுக்கு பின் வரலாற்று சாதனையை பதிவு செய்த பாஜக.!  - Seithipunal
Seithipunal


பஞ்சாப், அசாம், திரிபுரா, நாகாலாந்து, இமாச்சலப் பிரதேசம், ஆகிய 6 மாநிலங்களில் காலியாகும் 13 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் நாகாலாந்து, இமாச்சல பிரதேசத்தில் தலா ஒரு உறுப்பினர் பதவியை போட்டியின்றி பாஜக கைப்பற்றியது. நேற்று நடைபெற்ற தேர்தலில், அசாமில் இரண்டு உறுப்பினர்கள் மற்றும் திரிபுராவில் ஒரு உறுப்பினர் பதவியை வென்றது. இதன்மூலம் மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 100 ஆக உயர்ந்துள்ளது. இதனால் 1990 - ஆம் ஆண்டுக்கு பிறகு நூறு உறுப்பினர்களைக் கடந்த முதல் கட்சி என்ற பெருமையை பாஜக பெற்றுள்ளது.

245 உறுப்பினர்களை கொண்ட மாநிலங்களவையின் முன் பாஜகவிற்கு பெரும்பான்மை குறைவாக இருந்தாலும், 2014 -ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ‌ பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் மக்களவையில் பெரும்பான்மை பெற்றதிலிருந்து, மாநிலங்களவையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு வருகிறது. இதற்குப் பிறகு பல மாநிலங்களில் இந்த கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையும் அதிகளவு உயர்ந்துள்ளது.

கடைசி முறையாக 1990-ஆம் ஆண்டில் ஆளும் காங்கிரஸ் கட்சி, மாநிலங்களவையில் 100 உறுப்பினர்கள் என்று நிலையைக் கடந்து, 108 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக அந்த ஆண்டில் நடந்த தேர்தலில் காங்கிரசின் பலம் 99 ஆக குறைந்தது. பின்னர் 2014 வரை அதைத் தொடர்ந்து குறைந்து கொண்டே இருந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP MP 100


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->