புதிய வைரஸ் பாதிப்பு 3 முதல் 7 நாட்கள் வரை இருக்கும்.. பீதி அடைய வேண்டாம்..சொல்கிறது சீனா! - Seithipunal
Seithipunal


 புதிய வைரஸ் குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் குளிர்காலத்தில் ஏற்படும் தொற்று என்றும் சீன அரசு தெரிவித்துள்ளது.

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த  கொரோனா வைரஸ் பல ஆயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது.அந்த வடு ஆறுவதுக்குள் தற்போது சீனாவில் புதிய வைரஸ் ஒன்று பரவி வருவது மக்களிடையே பெரும் பேரதிர்ச்சியை ஏர்படுத்தியுள்ளது.

எச்.எம்.பி.வி என அழைக்கப்படும் இந்த வைரசால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  சீனாவின் வடக்கு மாகாணங்களில் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதில் சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனாவை போன்றே இந்த வைரசால் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.வைரஸ் பாதிப்பு காரணமாக ஆஸ்பத்திரிகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. பலருக்கு சுவாச பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது என தகவல் வெளியாகி உலக நாடுகளை பயமுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் புதிய வைரஸ் குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் குளிர்காலத்தில் ஏற்படும் தொற்று என்றும் சீன அரசு தெரிவித்துள்ளது. சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் தெரிவிக்கையில் , குளிர்காலத்தில் சுவாச நோய்த்தொற்றுகள் உச்சத்தில் இருக்கும்என்றும் 

நோய்களின் தீவிரம் குறைவாக உள்ளது என தெரிவித்துள்ளார் . மேலும் முந்தைய ஆண்டை விட சிறிய அளவில் பரவுகிறது என்றும் சீன குடிமக்கள் மற்றும் சீனாவுக்கு வரும் வெளிநாட்டினரின் ஆரோக்கியத்தில் சீன அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளது என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன் என கூறியுள்ள மாவோ நிங் சீனாவில் பயணம் செய்வது பாதுகாப்பானது என்றும்  தேசிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிர்வாகத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை கடைபிடிக்குமாறு குடிமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை கேட்டுக்கொள்கிறோம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தநிலையில் எச்.எம்.பி.வி வைரஸ் என்பது ஒரு தொற்று நோயாகும். இது காற்றின் மூலமாகவும் தொடுவதன் மூலமாகவும் பரவுகிறது. இந்த நோய் 2001-ம் ஆண்டு கண்டறியப்பட்டது. இதன் பாதிப்பு 3 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது சற்று நிம்மதியை தந்துள்ளது என சொல்லலாம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The incubation of the new virus lasts for 3 to 7 days Don't panic China says


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->