வேங்கை வயல் விவகாரம்.."சமூக அநீதிக்காக" கைகோர்த்து நிற்கிறீர்கள்.. திருமாவளவனுக்கு பாஜக பதிலடி..!!
BJP Narayana Tirupathy criticized Thirumavalavan
திமுக தலைவரும் தமிழகம் முதல்வருமான மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி சென்னை புளியந்தோப்பு பகுதியில் மக்கள் முதல்வரின் மனிதநேய திருநாள் என்ற தலைப்பில் 73வது வட்ட திமுக செயலாளர் கே.சுரேஷ்குமார் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் பொன்.குமார், கலாநிதி வீராசாமி எம்.பி, திருவிக.நகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தாயகம் கவி ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது "4வது தலைமுறையாக திராவிட இயக்கத்துக்கு தலைமை தாங்குகிறார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். அடுத்து அகில இந்திய அளவில் தலைமை தாங்க போகிறார். சனாதன சக்திகளை முதல்வர் மு.க ஸ்டாலினால் தான் வீழ்த்த முடியும். வேறு எந்த மாநிலத்திலும் சமூக நீதி என்ற குரல் கேட்கவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் மட்டுமே இந்த குரல் கேட்கிறது. ஸ்டாலினுடன் கைகோர்த்து நிற்பதற்கான காரணம் தேர்தலுக்காக அல்ல சமூக நீதிக்காக தான்." என பேசி இருந்தார். மேலும் பிரதமர் நரேந்திர மோடியையும் பாஜகவையும் கடுமையாக விமர்சனம் செய்து பேசி இருந்தார்.
திருமாவளவனின் இத்தகைய பேச்சை குறிப்பிட்டு தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி பதிலடி தந்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "ஸ்டாலினுடன் கை கோர்த்து நிற்பதற்கான காரணம் தேர்தலுக்காக அல்ல,சமூக நீதிக்காக": திருமாவளவன்.
வேங்கை வயலில் பட்டியலின மக்களின் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் பல மாதங்களாகியும் ஒருவரை கூட கைது செய்யாத திமுக அரசின் 'சமூக அநீதிக்காக' தான் கை கோர்த்து நிற்கிறீர்கள்?" என கடமையாக விமர்சனம் செய்துள்ளார்.
English Summary
BJP Narayana Tirupathy criticized Thirumavalavan