இந்தியா அமைதியாக இருப்பதற்கு ஹிந்துக்களின் சகிப்புத்தன்மை தான் காரணம்! சீமானுக்கு பாஜக கடும் கண்டனம்!
BJP Narayanan condemn to NTK Seeman
"எந்த மதத்தில் தீவிரவாதம் இல்லை? எங்களை கொன்று குவித்தது பௌத்த தீவிரவாதம். ஈராக் மீது போர் தொடுத்தது கிருஸ்துவ தீவிரவாதம், குஜராத்தில் இனப்படுகொலை ஹிந்து தீவிரவாதம்" என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி இருந்தார்.
இந்நிலையில், பாரதிய ஜனதா மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி இதற்க்கு கடும் கண்டனம் தெரிவித்து விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தவறான கருத்து மட்டுமல்ல, கண்டிக்கப்பட வேண்டிய கருத்து.
இலங்கை அரசுக்கும் விடுதலை புலிகளுக்கும் நடைபெற்றது மத ரீதியான போர் அல்ல. ஈராக் குவைத்தின் மீது போர்புரிந்து கைப்பற்றியதாலேயே அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகள் ஈராக் மீது போர் தொடுத்தன.
கோத்ரா ரயில் எரிப்பு தான் மதக்கலவரத்திற்கு காரணம். மேலும் குஜராத்தில் இஸ்லாமியர்களை விட ஹிந்துக்களும், காவல்துரையினரும் தான் அதிக அளவில் இறந்தனர் என்பது தான் உண்மை. உண்மைக்கு புறம்பான தகவல்களை சீமான் பரப்புவது கண்டிக்கத்தக்கது.
ஹிந்துக்கள் சகிப்புத்தன்மை மிக்கவர்கள், ஹிந்து பண்பாடு, நாகரீகம் அதையே வலியுறுத்துகிறது. கடைபிடிக்கிறது. இந்தியா அமைதியாக இருப்பதற்கு காரணம் ஹிந்துக்களின் சகிப்புத்தன்மை தான் என்பதை சீமான் உணர வேண்டும். ஹிந்து மதத்தில் தீவிரவாதம் உறுதியாக இல்லை" என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Narayanan condemn to NTK Seeman