ஆமை = கம்யூனிஸ்ட்டு, எல்லாம் நாடகம்! திமுகவிற்கு ஆதரவாக களமிறங்கிய பாஜக?!
BJP Narayanan say about samsung protest DMK and indi Alliance
காஞ்சிபுரம்: சுங்குவார் சத்திரத்தில் தொழிற்சங்க அங்கீகாரம், 8 மணி நேர வேலை, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் நிறுவனத் தொழிலாளர்கள் கடந்த சில வாரங்களாக வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தொழிலார்களின் போராட்ட பந்தலை காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்த்துறையினர் நேற்று இரவோடு, இரவாக அகற்றியுள்ளனர். மேலும், போராட்டத்தை முன்னெடுத்த தொழிற்சங்க நிர்வாகிகள் 10 பேரை கைது செய்து சட்டவிரோதக் காவலில் அடைத்து வைத்துள்ளனர்.
தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பாமக, அதிமுக, அமமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், பாஜகவின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "சாம்ஸங் தொழிற்சாலை பிரச்சினையில் கம்யூனிஸ்ட்டுகளின் தூண்டுதல் தான் கண்டிக்கத்தக்கது. "ஆமை புகுந்த வீடும், கம்யூனிஸ்ட்டுகள் புகுந்த தொழிற்சாலைகளும் உருப்படாது என்பது வரலாறு".
மேற்கு வங்காளத்தில் தொழில் துறையை முடக்கி, அம்மாநிலத்தின் பொருளாதார முன்னேற்றத்தை ஒழித்துக் கட்டிய கம்யூனிஸ்ட் கட்சிகள், தற்போது தமிழகத்தின் தொழில் துறையை ஒழித்துக் கட்ட சாம்ஸங் நிறுவன ஊழியர்களை தூண்டி விடுவது கண்டிக்கத்தக்கது.
இதற்கு துணை நிற்கின்றன INDI கூட்டணி கட்சிகள். ஆனால், திமுக இந்த கட்சிகளுக்கு வெண்சாமரம் வீசுவது ஏன்? காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தைரியமிருந்தால், திமுக அரசை எதிர்க்கட்டும். திமுக நடத்துவது நாடகமா? அல்லது திமுக வின் கூட்டணி கட்சிகள் நடத்துவது நாடகமா?" என்று நாராயணன் திருப்பதி கேள்வி எழுத்திப்பியுள்ளார்.
English Summary
BJP Narayanan say about samsung protest DMK and indi Alliance