ஜீயர்களின் முழு ஆசிர்வாதங்களும், இறைவனின் ஆசிகளும் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு கிடைக்க பெறட்டும் - பாஜக நாராயணன் டிவிட்! - Seithipunal
Seithipunal


பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் அவர்களை தமிழக காவல்துறை கைது செய்துள்ளதாக அறிகிறேன். 

தாங்கள் இருவரும் பேசிய அலைபேசி உரையாடலை சமூக ஊடகங்களில் பதிவிட்டதற்காக ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் அவர்கள் அளித்த புகாரின் மீது இந்நடவடிக்கை என சொல்லப்படுகிறது. 

சட்டப்படி இருவரின் அலைபேசி உரையாடலை சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியோடு பதிவு செய்ய வேண்டும் என்பதும், அவர்களுக்கிடையே நடந்த உரையாடலை சமூக ஊடகங்களில் பதிவிடுவதும் சட்டப்பிரிவு 21-ன் படி குற்றம் என்ற அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டிருப்பார் என்று கருதுகிறேன்.

சட்டம் தன் கடமையை செய்யட்டும், தவறில்லை. நீதிமன்றத்தில் அவர் தன் தரப்பு வாதங்களை வைக்கட்டும். ஆனால், அவர்களுக்கிடையே நடைபெற்றதாக சொல்லப்படும் உரையாடல் தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்தது. பொது மக்களுக்கு அந்த உரையாடலில் இருக்கும் உண்மைத்தன்மையை தெரிவிக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் அரசுக்கு உள்ளது. 

மூன்று ஜீயர்களும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் இல்லத்திற்கு சென்றார்கள் என்று அந்த உரையாடலில் இடம்பெற்றுள்ளது சரியா என்பதை உறுதி செய்ய வேண்டும். 

ஒரு வேளை, அந்த உரையாடலில் உண்மையிருப்பின், மூன்று ஜீயர்களின் முழு ஆசிர்வாதங்களும், இறைவனின் ஆசிகளும் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு கிடைக்க பெறட்டும்" என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Narayanan Thirupathy say about Narasimman Arrest DMK Udhay


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->