ஆர்.எஸ் பாரதி பிச்சை எடுக்க அலுமினிய தட்டுகளை பார்சல் அனுப்பிய பாஜக நிர்வாகிகள்! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற இந்திய எதிர்ப்பு மசோதா விளக்க பொதுக் கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி ஐபிஎஸ் படித்த தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் மெண்டல் என விமர்சனம் செய்திருந்தார். இந்த விமர்சனத்திற்கு அண்ணாமலை கோபாலபுரம் அறிவாலயத்தில் பிச்சை எடுப்பவர்கள் அப்படி தான் பேசுவார்கள் என பதிலடி தந்திருந்தார்.

இந்த பதிலளிக்க திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி "அறிவாலயம் தான் என் கோவில்" என பதில் கருத்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள் அறிவாலயம் கோவில் என்றால் வெளியே அமர்ந்து பிச்சை எடுப்பதற்காக அலுமினிய தட்டை ஆர்.எஸ் பாரதியின் வீட்டிற்கு அனுப்ப முடிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் பாஜக நகர ஊடக பிரிவு செயலாளர் காமேஷ், மாவட்டத் துணைத் தலைவர் செந்தில்குமார், மாவட்டச் செயலாளர் வாசன் உள்ளிட்டோர் சென்னை நங்கநல்லூரில் உள்ள ஆர்.எஸ் பாரதியின் வீட்டின் முகவரிக்கு பதிவு தபால் மூலம் தனித்தனியாக ஐந்து அலுமினிய தட்டுகளை பார்சல் அனுப்பி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்தான விமர்சனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP officials sent aluminum plates to DMK RS Bharati for beg


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->