அண்ணாமலை பற்றி பேசும் நாக்கு இருக்காது..!! அமைச்சர் கீதா ஜீவனுக்கு சசிகலா புஷ்பா பகிரங்க எச்சரிக்கை..!! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக சார்பில் கிறிஸ்மஸ் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சிறுபான்மை அணி சார்பில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் மாபெரும் நலத்திட்ட உதவி வழங்க விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட தலைவர் சித்ராங்கதன், சிறுபான்மை என அணி செயலாளர் அசோகன், பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், மாநிலத் துணைத் தலைவர் சசிகலா புஷ்பா, மாநில பொதுச் செயலாளர் பாலகணபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ஆயிரம் ஏழை எளிய கிறிஸ்துவ பெண்களுக்கு தையல் இயந்திரம் மற்றும் சேலை இலவசமாக வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து பேசிய சசிகலா புஷ்பா "திமுகவின் தேர்தல் வாக்குறுதியான மகளிர் காண ரூ.1,000 உரிமை தொகை, கல்வி கடன் ரத்து போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் மக்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு பிறகு அண்ணாமலைக்கு மட்டும் தான் தமிழக மக்களிடையே ஆதரவு இருக்கிறது.

பாஜகவினர் சனாதனம் பற்றி தொடர்ந்து பேசுவோம் ஏனென்றால் அது பாஜகவின் கொள்கை. தூத்துக்குடியில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன் மாநில தலைவர் அண்ணாமலையை கடமையாக விமர்சனம் செய்துள்ளார். அமைச்சர்களைப் பற்றி பொய் பேசுவதை அண்ணாமலை நிறுத்திக் கொள்ளாவிட்டால் மேடையில் ஏறுவோம் என பேசி இருக்கிறார்.

அமைச்சர் கீதா ஜீவன் அவர்களே நீங்கள் வீட்டில் இருந்து வெளியே வரும்போது கால்கள் இருக்காது, அண்ணாமலையை பற்றி பேசும் நாக்கு இருக்காது. நீங்கள் செய்யும் ஊழலை வெளியே கொண்டு வருவோம். சமூக நலத்துறை அமைச்சராக இருக்கும் நீங்கள் சமூகத்தை பேணி காக்கவில்லை. நாகரீக அரசியல் செய்ய வேண்டும் என சொல்லும் நீங்கள் தான் தெற்கத்தி பெண்களுக்கு அசிங்கத்தை ஏற்படுத்தி வருகிறீர்கள். இதே தூத்துக்குடியில் பாஜக வெற்றி பெறப்போகிறது" என கடுமையாக சாடினார். சசிகலா புஷ்பாவின் இத்தகைய பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Sasikala Pushpa warns DMK minister Geeta Jeevan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->