செம்ம டிவிஸ்ட்! பொய் சொன்னாரா எடப்பாடி பழனிசாமி! பூகம்பத்தை கிளப்பும் பாஜக!
BJP Side Say ADMK Lie
கர்நாடக மாநில சட்டமன்ற பொதுத் தேர்தலில் ஓ பன்னீர்செல்வம் தரப்பில் மூன்று வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டு, அதில் இரண்டு வேட்பாளர்களின் மனு ஏற்கப்பட்டது.
அதிமுக தரப்பில், புலிகேசி நகர் தொகுதியில் வேட்பாளர் இறக்கப்பட்டார். இதில், ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை வாபஸ் பெற்றனர்.
தொடர்ந்து அதிமுக வேட்பாளரும் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இது அதிமுகவினர் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
திடீரென ஏன் வாபஸ் பெற்றார்? காரணம் என்ன? என்று அதிமுகவினர் குழம்பி இருந்த நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிவிப்பில், பாரதிய ஜனதா கட்சியின் மேலிடப் பொறுப்பாளர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, கர்நாடக மாநில சட்டமன்றப் பேரவை தேர்தலில் வேட்புமனுவை திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொண்டதாகவும், அதற்க்கு இணங்க, தலைமை பரிசீலனை செய்து திரும்பப் பெற்றதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கர்நாடகா தேர்தலில் அதிமுக வேட்பாளரை திரும்பப் பெற பாஜக எந்த வலியுறுத்தலையும் செய்யவில்லை என்று, அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கரு நாகராஜன், பிரபல தனியார் செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுகவே தானாக முன்வந்து தான் தனது வேட்பாளரை திரும்ப பெற்றதாகவும், பாஜக துணை தலைவர் கரு நாகராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும், வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவிடம் கூடுதல் இடங்களில் போட்டியிடுவதற்கு பாஜக வலியுறுத்தும் என்றும் கரு நாகராஜன் அந்த தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.