#BREAKING || பா.ஜ.க - த.மா.கா இடையே இன்று தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை.!! - Seithipunal
Seithipunal


பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜி.கே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ள நிலையில் பாஜகவுடன் இன்று முதற்கட்ட பேச்சு வார்த்தையை தொடங்குகிறது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜி கே வாசன் இல்லத்தில் இன்று காலை 11 மணிக்கு தொகுதி பங்கீட்டிற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் அடங்கிய ஏழு பேர் கொண்ட பாஜக குழு ஜி.கே வாசன் உடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

இன்று நடைபெறும் இந்த பேச்சு வார்த்தையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது எந்தெந்த தொகுதியில் ஒதுக்குவது என்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டு இன்றே முடிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜக குழு நேற்று மாலை ஆலோசனை நடத்திய நிலையில் அதனை தொடர்ந்து இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் தேவேந்திர யாதவிடம் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Thamizh Manila Congress seat sharing discussion today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->