இன்ஸ்டாகிராம் நேரலையில் தற்கொலை செய்துகொண்ட பிரபலம்! அதிர்ச்சி பின்னணி!
Chhattisgarh Instagram live young woman suicide
சத்தீஸ்கரில், 19 வயது இளம்பெண் இன்ஸ்டாகிராம் லைவ் நேரலையில் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜான்ஜ்கிரில் வசித்த அங்கூர் என்ற இளம்பெண், கடந்த டிசம்பர் 29ஆம் தேதி, இன்ஸ்டாகிராம் லைவ் ஸ்ட்ரீமிங் செய்து கொண்டிருந்தார். அதில் 20க்கும் மேற்பட்டோர் நேரலை கண்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கூர் நேரலையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றார்.
நேரலைக் கண்டு கொண்டிருந்தவர்கள் உடனே அவரது செல்போனுக்கு அழைத்து தடுக்க முயன்றும், சிலர் அவரது இடத்துக்குச் சென்று உதவ முயன்றும் விட்டனர். ஆனால் அவர்கள் வரும் முன்னே அங்கூர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்திருந்தார்.
போலீஸ் விசாரணையில், அங்கூர், மிஸ்தா கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவரது பெற்றோர் ஐதராபாத்தில் தினசரி கூலித்தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகிறார்கள் என்பதும் தெரியவந்தது.
முதல் கட்ட விசாரணையில், காதல் விவகாரத்தில் ஏற்பட்ட மன உளைச்சலே தற்கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அங்கூர் மொபைல் போனில் அதிக நேரம் செலவிடுவார் என்று கிராம மக்கள் கூறியுள்ளனர். தற்போது அவரது மொபைல் சைபர் கிரைம் போலீசாரால் ஆய்வு செய்யப்படுகிறது.
English Summary
Chhattisgarh Instagram live young woman suicide