கிராமங்களில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள்..துணை சபாநாயகர் அதிகாரிகளுடன் ஆலோசனை!  - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநிலம் ,நெட்டப்பாக்கம் தொகுதியை சேர்ந்த பகுதிகளில் சமீபத்தில் பெய்த மழையினால் பாதிக்கப்பட்ட இடங்களை உடனே சீர் செய்ய அதிகாரிகளுடன் சட்டப்பேரவை துணைத்தலைவரும், நெட்டப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ராஜவேலு ஆலோசனை நடத்தினார்.கூட்டத்தில் உடைப்பு ஏற்பட்ட பாசன வாய்க்கால்களை சரிசெய்தல், வெள்ளப்பெருக்கால் அடித்து செல்லப்பட்ட பாலங்களை உடனடியாக கட்டுவது, பாசன வாய்க்கால் மதகுகளை சரி செய்து ஷட்டர் அமைப்பது போன்ற பணிகளை மேற்கொள்ளுவது என விவாதிக்கப்பட்டது.

புதுச்சேரி மாநிலம் ,நெட்டப்பாக்கம் தொகுதியை சேர்ந்த நெட்டப்பாக்கம், பனையடிக்குப்பம், வடுவக்குப்பம், பண்டசோழநல்லூர், கரையாம்புத்தூர், சின்ன கரையாம்புத்தூர், மணமேடு, கரியமாணிக்கம், மடுகரை, மொளப்பாக்கம், சூரமங்கலம் ஆகிய கிராமங்கள் தொடர் மழை மற்றும் தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மிகவும் பாதிப்பிற்குள்ளானது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட கிராமங்களில் உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டிய சீரமைப்பு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சட்டப்பேரவை துணைத்தலைவரும், நெட்டப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ராஜவேலு  தலைமையில் பொதுப்பணித்துறையின் செயற்பொறியாளர்  ராதாகிருஷ்ணன், உதவிப்பொறியாளர், இளநிலைப்பொறியாளர்கள் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்டோருடன் சட்டப்பேரவையில் உள்ள அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் உடைப்பு ஏற்பட்ட பாசன வாய்க்கால்களை சரிசெய்தல், வெள்ளப்பெருக்கால் அடித்து செல்லப்பட்ட பாலங்களை உடனடியாக கட்டுவது, பாசன வாய்க்கால் மதகுகளை சரி செய்து ஷட்டர் அமைப்பது, ஏரி மற்றும் வாய்க்கால்களின் கரைகளை பலப்படுத்துதல் போன்ற பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும் இப்பகுதியில் தடுப்பணை கட்டுவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Restoration works in villages on a war footing Deputy Speaker consults with officials


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->