போலீசார் வேடம்; ஓடும் ரயிலில் மாற்றுத்திறனாளி மீது தாக்குதல்: 3 பேர் மீது வழக்குப் பதிவு!
Role of Police Three booked for assaulting differently abled man on moving train
ஓடும் ரயிலில் ரயில்வே போலீசார் என்று கூறி மாற்றுத்திறனாளியை குடி போதையில் 3 பேர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஓடும் ரயிலில் மாற்றுத் திறனாளி பயணியை தாக்கிய தலைமைக் காவலர் பழனி என்பவர் மீது திருவாரூர் ரயில்வே போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மன்னார்குடியில் இருந்து சென்னை செல்லும் மண்ணை எக்ஸ்பிரஸ் ரயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் கருணாநிதி என்ற மாற்றுத்திறனாளி பயணம் செய்துள்ளார்.அப்போது நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் என்று கூறி ஏறிய 3 பேர் ரயில் பெட்டியின் கதவை திறக்குமாறு கூறியுள்ளனர். அப்போது மாற்றுத்திறனாளிகள் யாரும் கதவை திறக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் திருவாரூரில் ரயில் நின்ற போது பயணி ஒருவர் இறங்குவதற்காக கதவை திறந்ததும் உள்ளே சென்ற 3 பேர் கருணாநிதியை கன்னத்தில் அறைந்து தாக்கி உள்ளனர். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஓடும் ரயிலில் மாற்றுத் திறனாளி பயணியை தாக்கிய தலைமைக் காவலர் பழனி என்பவர் மீது திருவாரூர் ரயில்வே போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
English Summary
Role of Police Three booked for assaulting differently abled man on moving train