CM ஸ்டாலினை முந்திக்கொண்ட பாஜக புள்ளி! தொகுதி முழுவதும் வேற லெவல் சம்பவம்! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலுக்கான தேதி இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாக உள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை மும்முரமாக செய்து வருகின்றன.

தமிழகத்தை பொறுத்த வரை ஆளுங்கட்சியாக உள்ள திமுக எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் அரசியல் ரீதியாக மிகக் கவனமாக எடுத்து வைத்து வருகிறது.

மேலும் தமிழக அரசு சார்பிலும் நாளுக்கு நாள் புதிய புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டு மக்களை கவர முயற்சி செய்து வருகிறது.

இந்த நிலையில், தமிழக அரசு உருவாக்கும் திட்டங்கள் மக்களிடம் சென்று சேர்ந்துள்ளதா என்பதை உறுதி செய்யும் வகையில், மக்களிடமிருந்து நேரடியாக கருத்துக்களை பெற்று, அதனை செம்மைப்படுத்த "நீங்கள் நலமா" என்று திட்டத்தை தமிழக முதல்வர் முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து ஒரு சிலரிடம் தொலைபேசி மூலம் உரையாடி அவர்களிடம் இருந்த கருத்தினை கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையே, தமிழக முதல்வரின் இந்த "நீங்கள் நலமா'' திட்டம் ஓர் தேர்தல் பிரச்சாரம் என்றும், இது ஒரு தோல்வி அடைந்த திட்டம் என்றும், மக்கள் எந்த விதத்திலும் நன்றாக இல்லை என்பதை தெரிந்து கொண்டு, மீண்டும் மக்களை நோக்கி நீங்கள் நலமா என்று முதல்வர் கேட்கிறார் என்று எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.

மேலும், எக்ஸ் சமூக வலைத்தளத்தில் "நாங்கள் நலமாக இல்லை முதல்வரே" என்று ஹேஷ்டேக் மூலம் ட்ரண்ட் செய்தும் வருகின்றனர்.

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் பிரச்சார யுக்தியாக கருதப்படும் நீங்கள் நலமா திட்டத்திற்கு டஃப் கொடுக்கும் வகையில், பாஜகவின் தமிழ்நாடு மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம், மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட பெண்களுக்கு வீடு வீடாகச் சென்று மகளிர் தின வாழ்த்து அட்டையை வழங்கத் தொடங்கியுள்ளார்.

இந்த வாழ்த்து அட்டையில், "பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் தமிழக பெண்கள் 2022 -2023 ஆம் நிதி ஆண்டில் சுமார் 43731 கோடி ரூபாய் கடன் பெற்று முன்னேறி உள்ளார்கள்" என்ற மகிழ்ச்சி செய்தியையும் வினோஜ் பி செல்வம் தெரிவித்துள்ளார்.

மேலும், மகளிர்க்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, "எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண் இளைப்பில்லை" என்ற மகாகவி கண்ட புரட்சி புதுமைப் பெண்களாய் பாரத தேசத்தின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் நம் அன்பு தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக் கொள்வதாகவும், பெண்களுக்கு அதிகாரம் அளிப்போம், பாலின சமத்துவம் போற்றுவோம்" என்றும் வினோஜ் பி செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் தேர்தல் நெருங்கும் நேரத்தில் மக்களிடம் நேரடியாக தொடர்பு கொள்ளும் விதமாக நீங்கள் நலமா திட்டத்தை பிரச்சார யுக்தியாக தொடங்கியுள்ள நிலையில், மத்திய தென் சென்னை தொகுதியில் பாஜகவின் வினோஜ் பி செல்வம் நேரடியாகவே பெண்களை கவரும் விதமாக மேற்கொண்டுள்ள இந்த வாழ்த்து சொல்லும் யுக்தி பலரின் கவனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Vinoj P Selvam Campaign And Wish Womans day in Central South Chennai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->