ஹிந்தி திணிப்பை நாங்களே அனுமதிக்க மாட்டோம்.. பாஜக அண்ணாமலை.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இந்தி திணிப்பை பாஜக ஒருநாளும் அனுமதிக்காது என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் இந்தியை இணைப்பு மொழியாக பயன்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து மத்திய அரசு இந்தியை திணிக்க முயல்வதாக பல்வேறு கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த நிலையில் இதுகுறித்து பேசிய தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை "தமிழகத்தில் இந்தி திணிப்பை பாஜக ஒருநாளும் அனுமதிக்காது என்றும் ஏ.ஆர்.ரகுமான் தமிழை இணைப்பு மொழி எனக் கூறியதை வரவேற்கிறேன்" என்றும் தெரிவித்துள்ளார். மேலும், மத்திய பல்கலைகழக நுழைவுத் தேர்வு குறித்து பேசிய இவர் இந்த நுழைவுத் தேர்வால் தமிழக மாணவர்கள் பிற மாநிலங்களில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP will not allow Hindi dumping-Annamalai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->