இனி ஜம்மு காஷ்மீரில் தேர்தலை அனுமதிக்கும் தைரியம் பாஜகவுக்கு இருக்காது - உமர் அப்துல்லா.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில் ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்த பாஜக தயங்கும் என காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்ட பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.

இதில் ஆளும் கட்சியான பாஜக 66 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை எடுத்துள்ளது. கர்நாடகாவில் பாஜகவுக்கு ஏற்பட்ட தோல்வி வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்கும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் கர்நாடகாவில் பாஜகவின் தோல்வி குறித்து ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, கர்நாடக தேர்தல் தாக்கத்தால் இனி ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்தும் தைரியம் பாஜகவுக்கு இருக்காது. அடுத்து நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு இது ஒரு நல்ல செய்தி. வகுப்புவாத அரசியலை நிராகரித்து நாட்டின் வளர்ச்சிக்காக மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP will not have the courage to allow elections in Jammu and Kashmir -Umar Abdullah


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->