பாஜகவின் 'ஆப்ரேஷன் லோட்டஸ்' தோல்வி - கொக்கரிக்கும் முதலமைச்சர்.! - Seithipunal
Seithipunal


டெல்லியில் இன்று அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. 
இக்கூட்டத்திற்குப் பின்னர் அரவிந்த்‌ கெஜ்ரிவால் மற்றும் எம்எல்ஏக்கள் சேர்ந்து ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்திற்குச் சென்று, பாஜகவின் ஆப்ரேஷன் லோட்டஸ் தோல்வியடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர்.

இது குறித்து ஆம் ஆத்மி தலைவர் சவுரவ் பரத்வாஜ் தெரிவித்துள்ளதாவது,

"இன்றைய கூட்டத்தில் மொத்தம் 62 எம்எல்ஏக்களில், 50 எம்எல்ஏக்கள்  கலந்து கொண்டனர். இன்று வராதவர்கள் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் தொலைபேசி வாயிலாக ஆதரவு தெரிவித்தனர். மேலும், தங்களின் இறுதி மூச்சுவரை ஆம் ஆத்மிக்கு உண்மையாக இருப்போம் என்று உறுதியளித்துள்ளனர்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கேஜ்ரிவால் தெரிவித்துள்ளதாவது, 

"எங்கள் எம்எல்ஏக்கள் 40 பேரை பாஜகவினர் விலைக்கு வாங்க முயற்சித்தனர். இதற்கு ரூ.20 கோடி பேரம் பேசப்பட்டது. இந்த நிலையில் ஒரு எம்எல்ஏவைக்கூட அவர்களால் விலைக்கு வாங்க முடியவில்லை என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லி சட்டப்பேரவை தொகுதியின் 70 உறுப்பினர்களில் தற்போது ஆம் ஆத்மிக்கு 62 எம்எல்ஏக்களும், பாஜகவுக்கு 8 எம்எல்ஏக்களும் உள்ளனர். கட்சித் தாவல் சட்டத்தினை எதிர்கொள்ளாமல் 40 எம்எல்ஏக்கள் வரை பிரிக்கப்படலாம் என்பதால்,‌ பாஜக இதற்கு திட்டமிட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சியினர் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJPs Operation Lotus failure Delhi Chief Minister


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->