#சென்னை || பிரியாணி கடையில் மாமூல் கேட்டு தகராறு செய்த திமுக நிர்வாகி.?! வைரல் வீடியோ.!
briyani shop dmk member march 2022
சென்னையில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் திமுக நிர்வாகி ஒருவர், பிரியாணி கடையில் தகராறு செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
கடந்த இரு வருடங்களுக்கு முன்பு சென்னையின் உள்ள பிரபல ;சேலம் ஆர்ஆர் பிரியாணி; கடையில், திமுக நிர்வாகி ஒருவர் தகராறில் ஈடுபட்டு, கடை ஊழியரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து, திமுக தலைவர் மு க ஸ்டாலின் நேரடியாக அந்த கடைக்கு சென்று ஊழியர்களிடம் சமாதானம் பேசினார். தற்போது வரை இந்த பிரியாணி கடை சம்பவம் எதிர்க்கட்சிகளால் விமர்சனமாக திமுக மீது வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மீண்டும் சென்னையில் பிரியாணி கடையில் திமுக நிர்வாகி ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது.
சென்னை திருநீர்மலையில் உள்ள ஒரு பிரியாணி கடையில் மாமூல் கேட்டு கேட்டு தகராறு செய்த திருநீர்மலை திமுக இளைஞரணி செயலாளர் தினேஷ் என்பவரையும், திமுக உறுப்பினர் சுகுமார் என்பவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து வெளியான பதிவு பின்வருமாறு :
English Summary
briyani shop dmk member march 2022