மோடி 3.0 : அறிவிக்கப்பட்ட இலாகாக்கள் .. யாருக்கு எந்த துறை? - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியானதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை இடங்களுக்கும் மேல் பெற்று இருந்ததால், மீண்டும் என்டிஏ கூட்டணியே ஆட்சி அமைத்துள்ளது.

கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் நேற்று மூன்றாவது முறையாக பிரதமராகப் பதவியேற்றார் பிரதமர் மோடி. மேலும் 72 அமைச்சர்களும் அவருடன் பதவியேற்றனர். இதையடுத்து இன்று மாலை மோடியின் முதல் அமைச்சரவைக் கூட்டம் கூடியது. 

அக்கூட்டத்தில் அமைச்சர்களில் யாருக்கு எந்த துறை ஒதுக்கப் பட்டுள்ளது என்று தற்போது அறிவிக்கப் பட்டுள்ளது. அதன்படி பாஜக மூத்த தலைவர் நிதின் கட்கரிக்கு சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைசர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் அஜய் தம்தா மற்றும் ஹல்ஷ் மல்ஹோத்ரா ஆகியோர் நிதின் கட்கரிக்கு இணை அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் நிர்மலா சீதாராமனுக்கு நிதியமைச்சர் பதவி வழங்கப் பட்டுள்ளது. எஸ். ஜெய்சங்கருக்கு வெளியுறவுத் துறையம், பாஜக மூத்த தலைவர் ராஜ்நாத் சிங்கிற்கு பாதுகாப்பு அமைச்சர் பதவி வழங்கப் பட்டுள்ளது. மேலும் அமித்ஷாவிற்கு உள்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மற்ற அமைச்சர்களுக்கான துறைகள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிய வந்துள்ளது. முன்னதாக அமைச்சரவை பதவியேற்று 24 மணி நேரம் ஆகப்போகும் நிலையில் இன்னும் இலாகாக்கள் ஏன் அறிவிக்கப்படவில்லை என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cabinet Portfolios Announced For Modis 3rd Cabinet


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->