தமிழக எம்பிக்களின் சந்திப்பு திடீர் ரத்து! அவசரமாக கூடும் அமைச்சரவை! வெளியாகும் முக்கிய அறிவிப்பு? - Seithipunal
Seithipunal


தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையே உள்ளான காவேரி நதிநீர் பங்கீடு குறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான தமிழக எம்பிக்கள் குழு இன்று மாலை 6 மணிக்கு அளவில் நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங்கை சந்தித்து கோரிக்கை மனு வழங்க இருந்தனர்.

இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் தலைமையில் காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய அவசரக் கூட்டம் நடைபெற்று முடிந்த நிலையில் அவர் மத்திய நீர்வளத் துறை அமைச்சரை சந்தித்து காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய அவசரக் கூட்டத்தில் எடுத்த முடிவு கூறித்தான் அறிக்கையை அமைச்சரிடம் வழங்கினார்.

இதற்கிடையே இன்று தொடங்கிய நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 75 வருட நாடாளுமன்ற இந்திய நாடாளுமன்றத்தின் பாரம்பரியம் குறித்து பேசி வருகின்றனர். இந்த நிலையில் இன்று மாலை 6:30 மணி அளவில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் காவிரி நதி நீர் விவகாரம் தொடர்பாக தமிழக எம்பிக்களின் சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. டெல்லி சென்றுள்ள தமிழக எம்பிக்கள் குழு நாளை காலை 9 மணி அளவில் மத்திய நீர்வளத் துறை அமைச்சரை சந்தித்து தங்களின் கோரிக்கை மனுவை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இன்று மாலை 6:30 மணி அளவில் கூட உள்ள அமைச்சரவை கூட்டத்தில் மத்திய பாஜக அரசு சில முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக ஒரே நாடு ஒரே தேர்தல், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்யும் மசோதா உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பிரதமர் மோடி அறிவிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இது குறித்தான அறிவிப்பு வெளியாகலாம் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central cabinet mergency meeting will be held today evening


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->