தமிழகத்தை உலுக்கிய வெடி விபத்து.!! அதிமுக எம்.பியின் கேள்விக்கு தமிழக அரசை கை காட்டிய மத்திய அமைச்சர்.!!
Central govt explained the question raised by AIADMK MP regarding Krishnagiri blast accident
அதிமுக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை "கிருஷ்ணகிரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 10க்கு மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு சிலிண்டர் வெடித்தது தான் காரணமா? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி "சிலிண்டர் விநியோகம் செய்யும் நிறுவனங்களிடம் மத்திய அரசு விசாரணை நடத்தியது.
அதற்கு எந்தவித சிலிண்டரையும் விநியோகம் செய்யவில்லை என அந்நிறுவனங்கள் விளக்கம் அளித்துள்ளது. இந்த வெடிப்பிற்கான காரணம் எரிவாயு சிலிண்டராக இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. மேலும் தமிழக அமைச்சர் விபத்து ஏற்பட்டது குடோனில் இருந்த வெடி மருந்துகளால் தான் என ஒப்புக் கொண்டுள்ளார்.
மேலும் எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதை தடுப்பதற்காக குடியிருப்பு பகுதிகளில் எத்தனை குடோன்கள் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அரசு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது என தமிழக அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
பிரதமர் மோடி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும், காயமடைந்தவர்களுக்கும் நிவாரணம் அறிவித்துள்ளார். எனவே எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்க வாய்ப்பு இல்லை. கசிவு ஏற்பட்டால் மட்டுமே விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்கும் ஏதாவது காரணம் இருக்கும். வெடி விபத்து குறித்து தமிழக அரசு விரிவான ஆய்வு செய்து வருகிறது" என மத்திய அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
English Summary
Central govt explained the question raised by AIADMK MP regarding Krishnagiri blast accident