2-வது நாளாக மத்திய குழுவினர் ஆய்வு.! கூடுதல் நிவாரணம் கேட்ட அமைச்சர்..! - Seithipunal
Seithipunal


புதுவை மாநிலத்தில் ஃபெங்கல் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை 2-வது நாளாக மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

ஃபெங்கல் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை 2-வது நாளாக மத்திய குழுவினர் ஆய்வு செய்து வரும் நிலையில் காலப்பட்டு தொகுதிக்குட்பட்ட மீனவர் கிராமங்களை ஆய்வு செய்தனர் மேலும் காலாப்பட்டில் உள்ள மீனவ கிராமங்களில் ரூ.100 கோடி அளவிற்கு பதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கு ஏற்றார் போல மத்திய அரசு நிதி வழங்க வேண்டுமென சட்டமன்ற உறுப்பினர் கல்யாண சுந்தரம் மத்திய குழுவிடம் மனு அளித்தார்.  

இதேபோல  மத்திய அரசின் பேரிடர் ஆய்வுக்குழுவினர் மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழை மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்தனர், அக் குழுவினரோடு  தொகுதியின்  சட்டமன்ற உறுப்பினரும், உள்துறை அமைச்சருமான நமச்சிவாயம்  தலைமையில் ஆய்வு குழுவினர் அப்பகுதியில் ஆய்வு செய்து மழை பாதிப்பு  சேதாரங்களை பார்வையிட்டு கூடுதல்  நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் அவர்கள் பேரிடர் குழுவிடம் கேட்டுக்கொண்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central team inspects for second day Minister asks for more relief


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->