பிணராயி விஜயன், அரவிந்த் கெஜ்ரிவால் கூட்டணியில் பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் சந்திரசேகர ராவ்! - Seithipunal
Seithipunal


தேசிய அளவிலான அரசியலில் கவனம் செலுத்திடும் முயற்சியில் இறங்கியுள்ள தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர் ராவ், தனது கட்சியை தேசிய கட்சியாக அறிவித்திருந்தார்.

அதன்படி, வரும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டும் பணியில் தெலுங்கானா மாநில முதல்வரும், பாரத ராஷ்டிரிய சமிதி தலைவருமான சந்திரசேகர ராவ் ஈடுபட்டுள்ளார். 

இதனையடுத்து சமீபத்தில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் பெயரை பாரத் ராஷ்டிர சமிதி என பெயர் மாற்றம் செய்து தேசிய கட்சியாக அறிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையில் இயங்கி வந்த தெலுங்கானா ராஷ்டிர சமிதி (TRS) கட்சியின் பெயரை பாரத ராஷ்டிர சமிதி (BRS) என மாற்ற தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ள நிலையில், தற்போது பாரத ராஷ்டிர சமிதி (BRS) கட்சியின் கொடியையும் அறிமுகம் செய்துள்ளார்.

இந்த நிலையில் பாரத ராஷ்டிரிய சமிதி கட்சியின் (BRS) பொதுக்கூட்டம் சந்திரசேகர ராவ் தலைமையில் கம்மத்தில் உள்ள மைதானத்தில் இன்று இரவு நடைபெற உள்ளது. இந்த பொது கூட்டத்திற்காக சாலைகள் முழுவதும் பேனர்கள் வைக்கப்பட்டு, தோரணங்கள் கட்டப்பட்டு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த பொது கூட்டத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் பங்கேற்கின்றனர். 

பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் வலுவான கூட்டணி அமையும் என்பதால் வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு கடும் நெருக்கடி நிலவும் என கூறப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chandrashekhar Rao political Meeting Aravind Kejriwal and Pinarayi Vijay participate


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->