சற்றுமுன் : அடுத்தடுத்த அதிரடிகள் தாங்க முடியாமல் சவுக்கு சங்கர் எடுத்த விபரீதம் முடிவு.!
Chawku Shankar fasting against visitors not allowed in jail
சவுக்கு சங்கர் தனது சமூக வலைதள பக்கத்தில் உயர் நீதிமன்ற நீதிபதியான சாமிநாதன் பற்றி அவதூறாக கருத்து பதிவு செய்திருந்தார். மேலும், நீதித்துறை அனைத்தும் ஊழலில் சிக்கியுள்ளதாக பேசினார். இது குறித்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்து விசாரணை செய்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மீண்டும், மீண்டும் அவகாசம் வேண்டும் என்று சவுக்கு சங்கர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. பின், ஊடகங்களில் இதுபோல பதிவுகளை செய்ய மாட்டேன் என நீதிபதி உறுதி அளிக்க கேட்டுள்ளார். இருப்பினும், சவுக்கு சங்கர் அதற்கு மறுப்பு தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, இந்த வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், சவுக்கு சங்கருக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.
மேலும், லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவுத்துறை நிரந்தரமாக சவுக்கு சங்கரை அரசு பணியில் இருந்து நீக்கியது. மேலும், கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சவுக்கு சங்கரை பார்க்க வருபவர்களை சந்திக்க ஒரு மாதத்திற்கு சிறை நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இந்த நிலையில் கடலூர் மத்திய சிறையில் உள்ள சவுக்கு சங்கரை சந்திக்க பார்வையாளர்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சவுக்கு சங்கர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
English Summary
Chawku Shankar fasting against visitors not allowed in jail