#BigBreaking || சென்னை அருகே பரபரப்பு - முற்றிலும் முடங்கிய சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை.! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் அருகே 450 க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்படுவதை எதிர்த்து, அந்த குடியிருப்புவாசிகள் தற்போது சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டம் காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரு மார்க்கங்களிலும் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

நீர் நிலை மற்றும் மேய்க்கால் பகுதி பகுதியில் 450க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கட்டப்பட்டு இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது.

அதன்பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். தற்போது 450 மேற்பட்ட வீடுகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தினர். இதனை கண்டித்து பொதுமக்கள் அந்த குடியிருப்புவாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே போராட்டம் செய்து கொண்டிருக்கும் மக்களிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chengalapattu maraimalai nagar road block protest


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->