20 வழக்கு இருக்கு! எப்படி உள்ள விட்டாங்க? விசாரணையில் வெளியான அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக மத்திய அரசிடம் விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி தெரிவித்துள்ளார்.  

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் குறித்து 2வது நாளாக நடந்த விசாரணைக்கு பின், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி மம்தா குமாரி செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தாவது, 

"அண்ணா பல்கலைக்கழகத்தின் பல இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்தோம். பாதிக்கப்பட்ட மாணவியையும், அவரது குடும்பத்தினரையும் சந்தித்து விவரங்களை கேட்டறிந்தோம். மேலும், தமிழ்நாடு ஆளுநரையும் சந்தித்து விசாரணை குறித்து கலந்துரையாடினோம்.  

இதற்கான முழு அறிக்கையை விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும். யார் தவறு செய்திருந்தாலும், அவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்கும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.  

பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடைபெறுவதற்கான சூழல்களை கட்டுப்படுத்த மத்திய அரசு உறுதியாக நடவடிக்கை எடுக்கும். அதே நேரத்தில், குற்றவாளி மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தும் அவர் எப்படி வெளியில் நடமாடவிட்டார்கள்? அரசு ஏன் இதற்கு முன்னதாக நடவடிக்கை எடுக்கவில்லை?" என்ற கேள்வியையும் மம்தா குமாரி எழுப்பியுள்ளார்.  

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Anna University Case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->