கேஸ் லாரி கவிழ்ந்து விபத்து - கோவையில் பள்ளிகளுக்கு விடுமுறை.!
school leave in coimbatore for gas tanker lorry accident
கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சியில் இருந்து வந்த கேஸ் டேங்கர் லாரி கோயம்புத்தூர் மாவட்டம் அவினாசி சாலை உப்பிலிபாளையம் மேம்பாலம் ரவுண்டானாவில் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் டேங்கர் லாரியில் இருந்து கேஸ் கசிவதால் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். மேலும் டேங்கரை கிரேன் மூலம் தூக்கி நிறுத்த முயற்சி செய்து வருகின்றனர். இதனால் மேம்பாலத்தில் போக்குவரத்தை தடை செய்த போலீசார் மாற்று வழியில் வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த நிலையில் கோவையில் டேங்கர் லாரி விபத்துக்குள்ளான பகுதியில் இருந்து 500 மீட்டர் அருகாமையில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், முதற்கட்டமாக பனிப்பொழிவு காரணமாக விபத்து ஏற்பட்டதாக தகவல் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
school leave in coimbatore for gas tanker lorry accident