மாதவரத்தில் போதைப்பொருள் விற்பனை - மேலும் 2 பேர் கைது.!
two peoples arrested for drugs sales in chennai mathavaram
சென்னை முழுவதும் போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாதவரத்தில் ரூ.16 கோடி மதிப்புள்ள மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மெத்தபெட்டமைன் போதைப்பொருளை விற்பனை செய்ததாகவும் தெரிய வந்தது. மேலும், அவர்களிடம் இருந்து 5 நாட்டுத்துப்பாக்கிகள், 79 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில், இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் கும்பலோடு தொடர்பு வைத்து கொண்டு கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
போதைப்பொருள் விற்பனை கும்பலைச் சேர்ந்த பெரும்பாக்கம் ராஜா, சத்யசீலன் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் போதைப்பொருள் விற்பனை மட்டுமின்றி ஆயுதங்கள் விற்பனையிலும் ஈடுபட்டார்களா? எங்கிருந்து துப்பாக்கி வாங்கினர்? என்று தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
two peoples arrested for drugs sales in chennai mathavaram