சென்னை | நாடக காதலனை நம்பி, 6 மாத கற்பத்துடன் நடுத்தெருவுக்கு வந்த இளம்பெண்!
Chennai Drama lover Case Ayanavaram
சென்னை : அயனாவரம் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரின் தாயார், அயனாவரம் காவல் உதவி ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், "எனது 22 வயது மகள் கடந்த செப்டம்பர் மாதம் வீட்டில் சோர்வாக இருந்தார். அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றேன். அப்போது அவர் மூன்று மாத கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனை அடுத்து எனது மகளிடம் நான் விசாரணை செய்த போது, எங்களின் வீட்டு அருகே வசித்த சதீஷ் என்ற 24 வயது இளைஞரை, 5 வருடங்களாக காதலித்து வந்ததாக தெரிவித்தார். இருவரும் நெருங்கி பழகியதில் பழகியதால் தற்போது எனது மகள் 6 மாத கர்ப்பமாக இருக்கிறார்.
எனது மகளை திருமணம் செய்ய நடவடிக்கை எடுத்த போது, சதீஷ் ஏற்கனவே ஒரு பெண்ணை கடந்த ஐந்தாம் தேதி திருமணம் செய்து கொண்ட செய்தி தெரிய வந்தது.
எனது மகள் என்னை அழைத்துச் சென்று, சதீஷ்-டம் நியாயம் கேட்க சென்றார். அப்போது சதீஷ், எனது மகளை காதலிக்கவே இல்லை என்று தெரிவித்தார்.
இதனால் விரக்தி அடைந்த எனது மகள், கடந்த அக்டோபர் மாதம் தற்கொலைக்கு முயன்று, கேஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். ஆனால் போலீசார் புகாரை விசாரிக்காமல் வேறு காவல் நிலையத்திற்கு அனுப்பி அலைக்கழித்தனர். எனவே எனது மகளின் வாழ்க்கையை சீரழித்த சதீஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த புகாரில் இளம் பெண்ணின் தாய் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த புகார் மீதான விசாரணையை நடத்தி நடவடிக்கை எடுக்க உதவி ஆணையர் உத்தரவிட்ட தன் பெயரில், அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், இளம்பெண்ணின் காதலன் சதீஷை நேரில் அழைத்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
மேலும், நம்ப வைத்து மோசடி செய்தல், பாலியல் பலாத்காரம் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் சதீஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
English Summary
Chennai Drama lover Case Ayanavaram