ஒருவரை கைது செய்ததால் உங்களை பாராட்டணுமா? வெளுத்து வாங்கிய உயர்நீதிமன்றம்!
Chennai HC AU Student Abuse case TNGovt DMK TN Police
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்து வருகிறது.
இன்று தொடங்கிய வழக்கு விசாரணையில் தமிழக அரசிற்கும், காவல்துறைக்கும் நீதிபதிகள் சராமாரியான கேள்விகளை எழுப்பினர். அதன் விவரம் பின்வருமாறு:
நீதிபதிகள்: ஒருவரை கைது செய்து செய்ததற்காக பாராட்ட வேண்டும் என எப்படி நீங்கள் சொல்ல முடியும்? குற்றத்தை தடுக்க வேண்டியது காவல்துறையின் கடமை.
முதல் தகவல் அறிக்கை கசிய வில்லை என்றால் வழக்கு பதியப்பட்டது ஏன்?
விசாரணையின் போதே ஒருவர் குற்றவாளி தான் என காவல் ஆணையர் எப்படி முடிவுக்கு வந்தார்?
விசாரணை அதிகாரி ஆணையருக்கு கீழ் பணிபுரிபவர் என்றும் அவரை எப்படி மற்றொருவரை கண்டுபிடித்தார்?
ஒரு வழக்கில் மட்டும்தான் ஞானசேகருக்கு தொடர்பு உள்ளது என்று எப்படி முடிவுக்கு வந்தீர்கள்?
கைது செய்யப்பட்டவர் காலில் கட்டு ஏன் போடப்பட்டுள்ளது?
அரசு தரப்பு: மாணவி வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகர் ஆளுங்கட்சி நிர்வாகி இல்லை. ஞானசேகர் மீது உள்ள 20 வழக்குகள், கடந்த 2010 மற்றும் 2018 ஆண்டுக்கு இடையே பதிவு செய்யப்பட்ட வழக்குகள்.
நீதிபதிகள்: மாணவிகளின் பாதுகாப்புக்காக அண்ணா பல்கலைக்கழகம் என்ன செய்துள்ளது? நிர்பயா நிதி எப்படி செலவிடப்பட்டது? என்ற விவரங்களுடன் கூடிய அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டனர்.
மேலும் நீதிபதிகள், கல்வி நிறுவனங்களில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்து உள்ளதாக தெரிவித்து, இந்த போதைப் பொருட்களை தடுக்க சிறப்பு அதிரடி அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
அப்போது குறுக்கிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர், ஏற்கனவே சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
English Summary
Chennai HC AU Student Abuse case TNGovt DMK TN Police