அரசு அதிகாரிகளுக்கு தெரியாமல் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் நடைபெற வாய்ப்பு இல்லை - சென்னை உயர்நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


அரசு அதிகாரிகளுக்கு தெரியாமல் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் நடைபெற வாய்ப்பு இல்லை என்று, சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்ற வேண்டும் என்ற உத்தரவை, சென்னை உயர்நீதிமன்றம் பிறப்புத்துள்ளது. 

மேலும் இது குறித்த வழக்குகளை தீவிரமாக கையில் எடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

அதன் அடிப்படையில் தமிழக அரசும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அரசு ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றது.

அதே சமயத்தில் ஒரு சில இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அரசு அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில், திருவள்ளூரில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற. மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கை தொடர்பான ஒரு வழக்கு ஒன்று இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த இந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.

அரசு அதிகாரிகளுக்கு தெரியாமல் ஆக்கிரமிப்புக்கு வாய்ப்பில்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளது. மேலும், "இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மை பாதுகாக்கும். இயற்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தினால் சுனாமி, பூகம்பம் போன்ற பேரிடர்கள் ஏற்படும். நீர்நிலைகளை பாதுகாப்பது அரசின் கடமை" என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai hc say about TNGovt staffs and nature issue


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->