கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு அந்த மாதிரி வேலை கொடுக்க முடியாது - தமிழக அரசு அதிரடி!
Chennai HC TNGovt Info Kalappu thirumanam job issue
கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு, டிஎன்பிஎஸ்சி, வேலைவாய்ப்பு அலுவலகம் மேற்கொள்ளப்படும் பணி நியமனங்களில் மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும் என்று தமிழக அரசு தகவல் தெரிவித்ததுள்ளது.
டிஎன்பிஎஸ்சி மூலம் நேரடியாக செய்யப்படும் நியமனங்களில் கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கு உரிமை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் மனுவுக்கு பதிலாகிக்க கூறி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இன்று தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அளித்துள்ள தகவலில், "வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் மேற்கொள்ளப்படும் பணி நியமனங்களில் மட்டுமே கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
நேரடி பணி நியமனங்களில் கலப்புத் திருமணம் புரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை" என்று தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், டிஎன்பிஎஸ்சி மூலம் நேரடியாக செய்யப்படும் நியமனங்களில் கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கு உரிமை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
English Summary
Chennai HC TNGovt Info Kalappu thirumanam job issue