சென்னை | நடுத்தெருவில் கேஎஸ் அழகிரி பேரன், ஐஏஎஸ் அதிகாரி குடும்பத்துக்கும் இடையே நடந்த சண்டை! வைரல் வீடியோ!
Chennai KS Alagiri Family And IAS Family Fight in Road
சென்னை அசோக் நகர் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையர் குடும்பத்துக்கும், காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரியின் குடும்பத்துக்கும் இடையே நடந்த விவகாரத்தில் 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கே.எஸ்.அழகிரியின் மகளும், பேரனும் சென்னை அசோக் நகரில் காரில் சென்று கொண்டிருக்கும் போது, இந்து சமய அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையர் கண்ணன் குடும்பத்தினர் சென்ற காரை முந்தி செல்வதில் தகராறு ஏற்பட்டது.
இந்த விவகாரத்தில் கே.எஸ்.அழகிரியின் மகள், பேரன் அளித்த புகாரின் பேரில் ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் உட்பட 3 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், ஐஏஎஸ் அதிகாரி கண்ணனின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் கே.எஸ்.அழகிரியின் உறவினர்கள் மீதும் 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், கே.எஸ்.அழகிரியின் மகளும், பேரனும், ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் காரில் பயணம் செய்த பெண்ணுக்கும் இடையே நடக்கும் வாய் சண்டை காட்சிகள் அடங்கிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
Chennai KS Alagiri Family And IAS Family Fight in Road