#சென்னை || நந்தனம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் - அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர் இடையே மோதல்.! - Seithipunal
Seithipunal


சென்னை, நந்தனம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள், சைதாப்பேட்டையில் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் உடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

52 பி என்ற அந்தப் பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்தபோது மாணவர்களை உள்ளே வரச் சொன்னதால், ஓட்டுனர் மற்றும் நடத்துனர் உடன் கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சைதாப்பேட்டை அருகே பேருந்து நின்று கொண்டிருந்தபோது, அந்த பேருந்தில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்ட நந்தனம் கல்லூரி மாணவர்கள், படிக்கட்டில் தொங்கி பயணம் செய்துள்ளனர். 

அப்போது, மாணவர்களை உள்ளே வரவேண்டும் என்று பேருந்தில் நடத்துனரும், ஓட்டுனரும் தெரிவித்துள்ளனர். இதனால், மாணவர்கள் ஒன்று சேர்ந்து பேருந்தின் ஓட்டுனர், நடத்துனரை தாக்கியதாக சொல்லப்படுகிறது.

இதனை அடுத்து பேருந்தை நிறுத்திய ஓட்டுநர், அந்த வழியாக வந்த மேலும் அரசு மாநகரப் பேருந்துகள் நிறுத்தப்பட்டு, அந்த பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கல்லூரி மாணவர்களிடையே தகராறில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்த மோதலில் அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கு காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் வந்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், நிலைமை சீரடைந்து. போக்குவரத்தும் சீரானது.

அதே சமயத்தில் நந்தனம் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 4 பேரை போலீசார் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai nandhanam college student attack bus driver


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->