சென்னை | ராட்சச அலையில் சிக்கிய நால்வரில் இரண்டு பேரின் உடல் மீட்பு  - மீதி இருவரின் நிலை என்ன?  - Seithipunal
Seithipunal


சென்னையில் கொருக்குப்பேட்டை அம்பேத்கர் நகர், 2-வது தெருவைச் சேர்ந்தவர் கரீம் மொய்தீன். நேற்று முன்தினம் காலை திருவொற்றியூர் பலகை தொட்டிக்குப்பம் அருகே உள்ள கடலில் இவரது குடும்பத்தினர் 9 பேர் குளித்தனர்.

அப்போது கடலில் எழுந்த ராட்சத அலையில் சிக்கிய ஆட்டோ டிரைவர் கபீர் (வயது 24), சிறுமி அம்ரீன் (வயது 18), அவருடைய தம்பி ஆபான் (வயது 14), அவர்களது நண்பர் சபரி (வயது 16) ஆகிய 4 பேரும் கடலில் மூழ்கினர். 

அவர்கள் நான்கு பேரையும்  அருகில் இருந்த மீனவர்களும், உறவினர்களும் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.  நான்கு பேரும் கடலில் மூழ்கி மாயமானார்கள். அவர்களை திருவொற்றியூர் போலீசார், தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் மெரினா நீச்சல் படை சிறப்பு வீரர்கள் தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். 

இந்நிலையில், நேற்று காலை மாயமான நான்கு பேரில் சபரியின் உடல், அவர்கள் கடலில் மூழ்கிய இடத்தின் அருகே கரை ஒதுங்கியது. அதேபோல் திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகே சிறுமி அம்ரீன் உடலும் கரை ஒதுங்கியது.

போலீசார் இரண்டு பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான சபரி, பிளஸ்-1 மாணவர் ஆவார். நண்பர்கள் கடலில் குளிக்க செல்வதை அறிந்து அவர்களுடன் வந்தபோது கடலில் மூழ்கி பலியானார்.

இரண்டு பேரின் உடல்களை பார்த்து அவர்களின் பெற்றோர் கதறியதை பார்க்க பரிதாபமாக இருந்தது. 
மேலும், கடலில் மூழ்கி மாயமான கபீர், ஆபான் ஆகிய மற்ற இரண்டு பேரின் நிலை என்ன ஆனது? என்பது தெரியவில்லை. இதனால் அவர்களின்  பெற்றோர் மற்றும் உறவினர்கள் தவிப்பில் உள்ளனர். 

அவர்கள் கடற்கரையோரம் கவலையுடன் காத்திருக்கின்றனர். நேற்று 2-வது நாளாக அவர்கள் 2 பேரையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai thottikuppam beach accident


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->